tamilnadu

img

டி.ராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,ஜூலை 22- தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா (70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்களின் உரிமைகளை காக்க துணிச்சலான போராட்ட குணத்திற்கு சொந்தக்காரரான அவர் அரசியல் சட்டத்தின் அம்சங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேரத்தில்  பொதுச் செயலாளரானது வரவேற்கத்  தக்கது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாது காக்கும் பணியில் வெற்றி பெற வாழ்த்து வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

;