சென்னை, ஆக.20- சென்னை போரூர் ராமச்சந்திரா தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மதுரை சென்ற மதிமுக பொதுச் செய லாளர் வைகோ எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சென் னைக்கு திரும்பிய அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவரது உடல்நிலை மிகவும் சோர் வாக இருப்பதாகவும் நான்கு நாட்கள் மருத் துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் படியும் அதன்பிறகு 15 நாட் கள் நன்றாக ஓய்வெடுக்கும் படியும் மருத்து வர்கள் ஆலோசனை வழங்கியிருக்கி றார்கள். அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.