tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தம்: பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க அபிமன்யு அழைப்பு

புதுச்சேரி,டிச.28- பொதுத்துறை நிறுவனத் தைப் பாதுகாக்கும் போராட்டத் தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திர ளாகப் பங்கேற்க வேண்டும் என்று  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்  அகில இந்தியப் பொதுச்செயலா ளர் பி.அபிமன்யு வேண்டுகோள் விடுத்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்  படுத்த வேண்டும்.முதலாளி களுக்குச் சாதகமாகத் தொழிலா ளர் நலச்சட்டங்களைத் திருத்து வதைக் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனத்தை பாது காக்க வேண்டும்.நேரடி நியமன  ஊழியர்களுக்கு 30விழுக்காடு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதி யம் ரூ.21ஆயிரமாகவும், ஓய்வூ தியம் 10ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.1.1.2017 முதல்  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை  அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலு வலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பி.அபிமன்யு சிறப்பு அழைப்பாள ராகப் பங்கேற்றுப் பேசுகையில், மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஊழியர் விரோத கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்டாக செயல்படுகிறது. தேசத்தின் சொத்துக்களை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான கொள்கைகளை உருவாக்கியுள்ளது. இதனாலே பிஎஸ்என்எல் வளர்ச்சிக்காக எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை.  மேலும் விலைவாசி உயர்வு மக்  களை வாட்டி வதைத்து வருகிறது.  எனவே தான் மத்திய தொழிற் சங்கங்கள் ஜனவரி 8ல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங் களைப் பாதுகாக்கும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை ஊழியர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார். இப்போராட்டத்தில்  பிஎஸ் என்எல் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன், ஒப்பந்த ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் குமார், ஓய்வூ தியர் சங்கத் தலைவர் சக்திவேல்  உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள்  பங்கேற்றனர்.

;