வேலூர், ஜூலை 26- வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 5,540 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 55 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இறந்த 95 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 5,540 பேர் புதிதாக வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.