tamilnadu

வேலூர் மாவட்டத்தில் குடிநீருக்காக 12 இடங்களில் பொதுமக்கள் மறியல்

வேலூர், ஜூன் 16- குடிநீருக்காக, 12 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பாலாறு வறண்டு விட்டது. ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. மோட்டார் பழுது போன்ற பல்வேறு பிரச்சனை களால், பல இடங்களில் குடிநீர் வினியோகம் நடை பெறவில்லை. காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் வினியோக பரா மரிப்பு பணிக்காக 19 நாட்களாக நிறுத்தப்பட்டு ள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தினமும் பொது மக்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபடு கின்றனர். வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூரில், கடந்த ஆறு மாதமாக, குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தலங்கை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். சோளிங்கர் அடுத்த கெங்காபுரத்தில், நான்கு மாதமாக குடிநீர் வினி யோகம் இல்லை. இதனால், வெங்குப்பட்டு - கெங்காபுரம் சாலையில் பெண்கள் மறியல் செய்தனர். காட்பாடி காங்கேய நல்லூரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நட வடிக்கை இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள்காங்கேய நல்லூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் விநி யோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

;