வேலூர், ஜூன் 21- வாலாஜா நகராட்சி துப்புரவுத்தொழிலாளருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க கோரியும், நக ராட்சி நிர்வாக சீர் கேடு மற்றும் கண்டித்தும், ஊழி யர் விரோதப் போக்கை கண்டித்தும் நகராட்சி ஆணையரை தொழிலா ளர்கள் முற்றுகையிட்டனர். மூன்று ஆண்டுகளாக வழங்கப்பாடமல் உள்ள சீருடையை வழங்க வேண் டும், கடந்த ஒரு ஆண்டாக தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை கணக்கில் வரவு வைக்க வேண்டும், விடு முறை சரண்டர் பணத்தை காலதாமதமில்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. சங்கத்தின் தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.காசி, மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி.எம். சீனிவாசன், மாவட்டச் செய லாளர் யோபு, ஆஷா உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.