வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவர்களின் முக்கிய உதவியாளரான ஹோம் ஹிக்சுக்கு 2 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டிரம்ப் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் ஜனாதிபதி டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த டிரம்ப், வாஷிங்டன் நகரில் உள்ள பிரபல ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை டிரம்ப் வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்தடுத்து மாற்றம்...
கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பொழுது டிரம்பு தனது பணிகளை வெள்ளி மாளிகையில் இருந்தே கவனிப்பார் என அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டது. அந்த தகவல் வெளியாகி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், திடீரென மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.