tamilnadu

img

ஹபீப் தன்வீர் பிறந்தநாள்

ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹபீப் தன்வீர் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த நாடகாசிரியரும், நாடக இயக்குநரும், விமர்சகரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.

ஹபீப் தன்வீர் செப்டம்பர் 1, 1923ல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்தவர்.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் மக்கள் நாடக மன்றம் ஆகிய அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தவர். இவ்வமைப்புகளில் அமைப்பாளர், செயலாளர் என பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டவர். இவர் முற்போக்கான நாடகங்களை எழுதியும் நடித்தும் இயக்கியும் பன்முகத் தன்மையுடன் விளங்கினார். இவர் சப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளையின் தலைவராக 2003 முதல் 2009 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் 2009ஆம் ஆண்டு ஜுன் 8 அன்று மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்