ஸ்டாக்ஹோம்:
மரபணு சார்ந்த ஆராய்ச்சியில் 2 பெண் வேதியியல் அறிஞர்களுக்கு 2020 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர். இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 பெண் வேதியியல் அறிஞர்கள் கூட்டாக பெறுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் வேதியியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.