tamilnadu

img

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா....

வாஷிங்டன்
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அதிக சேதாரத்தை சந்தித்துள்ள அமெரிக்காவில் இதுவரை அங்கு 12 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 76 ஆயிரத்து 928 பேர் பலியாகியுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 29,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 17 பேர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். 83 லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட்கள் எடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலையில் கட்டுக்குள் வருவது மிகவும் சிரமமான விஷயம் தான். 

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியர் வேலட் என்பவருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது. மேலும் டிரம்ப்பின் குடும்பத்திற்கு நெருக்கமாக இருப்பதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கெனவே வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியும், துணை ஜனாதிபதி ஆகியோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு நோய் தாக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

;