tamilnadu

img

விக்கிரவாண்டி பேரவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி (71)  இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தமிழ்நாடு  சட்டப்பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;