tamilnadu

img

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜூன் 8- தஞ்சாவூர் மாவட்டம், திரு வோணம் அருகே உள்ள தளிகை விடுதி மணிக்கிரான் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ஆறு முகம் வயது (47). இவர் திங்கட் கிழமை காலை தனக்கு சொந்த மான வயலில், விவசாய வேலை பார்க்க வரப்பில் நடந்து சென் றுள்ளார். அப்போது அங்கு மின் சார ஒயர் அறுந்து கீழே செடி களுக்கிடையே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்ற ஆறு முகத்தின் மீது மின்சாரம் தாக்கி யதில் சம்பவ இடத்திலேயே ஆறு முகம் உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.   

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ஆறுமுகத்திற்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையும், மனைவி சுமதியும் உள்ளார். மின் சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் திருவோணம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொது மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.