tamilnadu

img

வார்டு உறுப்பினரை மிரட்டிய விருதுநகர் ஆட்சியர்... பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகர்:
குடிநீர் பிரச்சனை பற்றி செல்லிடப்பேசியில் புகார் தெரிவிதத ஊராட்சிவார்டு உறுப்பினரை மிரட்டும் தொனியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பேசியுள்ளார். அவர்பேசிய ஆடியோ மாவட்டம் முழுவதும்வைரலாக பரவி வருகிறது.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்டது  வச்சக்காரப்பட்டி ஊராட்சி. இங்குள்ள ஒன்பதாவது வார்டுக்கு உரிய பகுதிகளாக சண்முகசுந்தராபுரம் மற்றும் அக்ரார்பட்டி உள்ளன.  சண்முகசுந்தரபுரத்தில் உள்ள200 வீடுகளுக்கு அருகில் உள்ள கண்மாயில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின் மோட்டார் பழுது காரணமாக பல நாட்களாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. இதையடுத்து, வார்டு உறுப்பினர் இராஜேஸ்வரியிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். அவர், ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.

வேறு வழியின்றி வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர்இரா.கண்ணனிடம் செல்போனில் பேசியுள்ளார். ஆடியோவில் பேசியுள்ள விவரம் வருமாறு:- “ஆட்சியர், நீ? யார்ட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா? அதற்கு வார்டு உறுப்பினர் நீங்கதான ஆட்சியர், குடி தண்ணீர் இல்லண்ணா யார்ட்ட போயி நாங்க சொல்றது. குழந்தைகளை வைச்சுக்கிட்ட கஷ்டப்படுகிறோம் எனக் கூறுகிறார். அதற்கு ஆட்சியர், என்ன ஓங்கி பேசுற,நீ பஞ்சாயத்துல தீர்மானம் போடு எனக் கூறவே, வார்டு உறுப்பினர் பதிலுக்கு, தலைவர், துணைத் தலைவர் பிரச்சனையில் எந்த வேலையும் நடக்கமாட்டேங்குது. நான் வட்டார வளர்ச்சிஅலுவலரிடமும் புகார் கூறி விட்டேன்எனக் கூறுகிறார். அதற்கு ஆட்சியர்,உறுப்பினர் அனைவரும் சேர்ந்து தீர்மானம் போட்டு இருவரின் பதவியையும் டிஸ்மிஸ் செய்யுங்கள். அல்லது தீர்மானம் போட்டு என்னிடம் வந்து கொடுங்க எனக் கூறுவதோடு, அந்தஆடியோ நிறைவடைகிறது.

மிகப்பெரிய பொறுப்பில் உள்ளமாவட்ட ஆட்சியர், பொது மக்கள் குடிநீர் பிரச்சனை எனக் கூறியதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறேன் என தெரிவித்திருக்கலாம். சாதாரண வார்டு உறுப்பினர் என்றாலும் அவர் மக்கள் பிரதிநிதி. அவரை மதித்து பேசியிருக்க வேண்டும். உயர் பொறுப்பில் உள்ளவர் இப்படிப் பேசுவது நாகரீகமா?என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஆட்சியர் இவ்வாறு தெரிவித்ததால் ஊர் மக்கள் அனைவரும் காலிக் குடங்களுடன் விருதுநகர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மக்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து வட்டாட்சியர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு பேச்சுவார்த்தைநடத்தினர். உடனடியாக மின் மோட்டார் சீர் செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்தி
வைக்கப்பட்டது.

;