tamilnadu

img

ஊரடங்கு நிவாரணம் வழங்குக... ஊதிய குறைப்பு கூடாது... அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

விருதுநகர்:
அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனாபொது முடக்க காலத்திற்கான நிவாரணத் தொகைவழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம், ஊதியக்குறைப்பு செய்தல்கூடாது எனவும், ஊரடங்கு உத்தரவை உடனடியாகரத்து செய்ய வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்புநடைபெற்ற போராட்டத்திற்கு எல்.பி.எப் தலைவர்மாடசாமி தலைமையில் ஏஐடியுசி பாண்டியன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.சாராள்,டியுசிசி சார்பில் பாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.ஆர்.ஆர்.நகரில் கே.ஆரோக்கியராஜ் தலைமையில் ஓ.ஆதிமூலம் துவக்கி வைத்தார். சிஐடியுபட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன் கண்டன உரையாற்றினார்.அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகே ஏஐடியுசி செயலாளர் முனியசாமி, சிஐடியு கன்வீனர் பி முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டதுணைத் தலைவர் எம். அசோகன், எஸ் காத்தமுத்து திருப்பதி, ஏஐடியுசி தலைவர் இளங்கோவன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.காரியாபட்டியில் ஜின்னா தலைமையில் சிஐடியுகன்வீனர் எம்.பரமசிவம் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, ஏ.அம்மாசி ஆகியோர் பேசினர்.

சிவகாசியில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் இ.பழனி, ஏஐடியுசி சார்பில் முனியசாமி ஆகியோர் தலைமையேற்றனர். ஏஐடியுசி நகர் தலைவர் ஜீவா துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிமணி நிறைவு செய்தார். பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் ஈஸ்வரபாண்டியன், சிஐடியு கன்வீனர் சுரேஷ்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.விருதுநகர் பணிமனை முன்பு கிளைத் தலைவர் ஜீவா தலைமையில் செயலாளர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி கண்டன உரையாற்றினார். மண்டல நிர்வாகிகள் தங்கவேலு, முத்துமுனீஸ்வரன், எஸ்.முத்துராஜ், எம்.முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சாத்தூரில் ஏ.சீனிவாசன், ஏஐடியுசி சார்பில் எஸ்.எஸ்.முத்து ஆகியோர் தலைமையில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் கே.விஜயகுமார் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ராமர், ஏஐடியுசி தலைவர் எஸ்.பழனிக்குமார் ஆகியோர் பேசினர். திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கம் சார்பில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் முனீஸ்வரன், தமிழ்நாடு ஓய்வு பெற்றபோக்குவரத்து கழக நலச்சங்கம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, மரிய டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தளவாய் புரத்தில் சிஐடியூமாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் சத்திரப்பட்டியில் சிஐடியூ சக்திவேல், ஏஐடியுசி கழுசு போத்தி, வத்திராயிருப்பில் சிஐடியுமணிக்குமார், ஏஐடியுசி கோவிந்தன் தலைமையில்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, ஆர்ப்பாட்டங்களில் சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், சட்டமன்றமுன்னாள் உறுப்பினர் ராமசாமி, ஆர்பி முத்துமாரி, ரவி, மதிமுக நிர்வாகி காதர் மைதீன், சிஐடியுசார்பில் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி சுப்பிரமணியன், ராமர் ஐஎன்டியுசி பிரபாகரன், எச்.எம்.எஸ்.கண்ணன் மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மதுரை
மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியுமாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா. கணேசன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சி. கருணாநிதி, எச்எம்எஸ் மாநில தலைவர் வீ. பாதர் வெள்ளை, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் எம். நந்தாசிங், எம்எல்எப் மாநில துணை பொதுச் செயலாளர்எஸ்.மகபூப்ஜான் ஆகியோர் பேசினார்மதுரை மாநகர் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பெத்தானியாபுரம், பாக்கியநாதபுரம், ஜெய்ஹிந்துபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி எல்.ஞானசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் பா. பழனியம்மாள், கட்டுமான சங்க நிர்வாகி க.இளங்கோவன், எம். பாலமுருகன், வி. கோட்டைசாமி போக்குவரத்து நிர்வாகி எஸ். ராவிசந்திரன் மற்றும் பலர்கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டக சாலைமுன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வி.முத்து, ஆர். வீரராகவன், இளங்கோவன், குறிஞ்சி உமா, ஜி.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஆவின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் பிச்சை தலைமைதாங்கினார். தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கதலைவர் ஜி.எஸ்.அமர்நாத், பொதுச்செயலாளர் இரா.லெனின், பொருளாளர் எம்.துரைசாமி, ஆவின்சிஐடியு கிளைத் தலைவர் ஜி.ரமேஷ்பாபு, வேல்சாமி, பாலாண்டி, எல்பிஎப் தலைவர் முருகன்,செயலாளர் திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் லூர்து ரூபி, மாவட்ட நிர்வாகிகள் எஸ். அழகுமலை, ஜி. மோகன், எஸ்.சந்தியாகு மாவட்டகுழு உறுப்பினர் சிவபெருமாள், மருந்து விற்பனை பிரதிநிதி சங்க செயலாளர் விவேகானந்தன், குடிநீர்வடிகால் வாரிய ஊழியர் சங்க தலைவர் ராமசாமிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி 
தேனி மாவட்டத்தில் 7 இடங்களில் தொழிற்சங் கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெரியகுளத்தில் மின்வாரிய அலுவலகம் முன்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். இராமச்சந்திரன்,மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் எஸ். ராமச்சந்திரன், சம்மேளன மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், எச்எம்எஸ் தலைவர் சீனிவாசன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் என்.ரவி முருகன், சிஐடியு நிர்வாகிகள் டி .ஜெயபாண்டி, ஏசி காமுத்துரை, ஏஐயுடியுசி டி.சி. சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டியில் சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் சி.முருகன், எம்.கணேசன், கே.காமராஜ், தங்கவேல், ஏஐடியுசி சார்பில் மாவட்ட செயலாளர் சென்றாய பெருமாள், பிச்சைமணி ,தொமுசமாவட்ட பொறுப்பாளர் எம். முருகன். பார்வர்ட் பிளாக் அம்மாவாசை ஆகியோர் கலந்து கொண்டனர். 

போடியில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், சிஐடியு சார்பில் பி.சந்திரசேகர், செல்வம், மீனா, ஏஐடியுசி முருகன் ஆகியோர்கலந்து கொண்டனர். சின்னமனூரில் சிஐடியு சார்பில் எஸ்.பொம்மையன், கே.எஸ்.ஆறுமுகம், ஏஐடியுசி சார்பில் ஆதிமூலம், தமிழ்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.உத்தமபாளையத்தில் சிஐடியு தலைவர் வீ.மோகன், ஏஐடியுசி தலைவர் பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவர்கள் பி. முருகேசன். ஐயப்பன், ஏஐடியுசி தலைவர் அஜ்மல்கான், தொமுச தலைவர்செல்லப்பா பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பெரியகுளம், தேனி, போடி, தேவாரம், கம்பம்ஆகிய இடங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை 
சிவகங்கையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.வீரையா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத்தலைவர் உமாநாத், மின் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாநிதி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் சமயத்துரை, ஏஐடியுசி அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் மீனாள், ஏஐடியுசி மாவட்டசெயலாளர் ஒய்.ரெத்தினம், காசிநாதன், பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வேங்கையா,சிறு வியாபாரிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் உலகநாதன், தனியார் ஓட்டுனர் பேரவை சங்கத்தின் மாநிலத் தலைவர் கமல்ஹாசன், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், ஐஎன்டியுசி தலைவர் வீரக் காளை, கந்தசாமி, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிவகங்கை அரசு போக்குவரத்து கழகபணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சமயத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.எல்பிஎப் தலைவர் ஜான் பீட்டர், முருகன், ஐஎன்டியுசி முருகேசன்,டிடிஎஸ்எப் ஆரோக்கியம் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, இராமேஸ்வரம், தொண்டி ஆகிய இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொண்டியில் கலந்தர் முகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, எஸ்.ஏ சந்தானம், நாகூர் பிச்சை, நவாப்கான், பிஸ்மில்லா, சாகுல், நைனா முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.முதுகுளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரான்சீஸ் . திருமலை உட்பட பலர்கலந்து கொண்டனர். பரமக்குடியில் எம்.ஆர்.முரளி, வி.முருகன், எஸ்.ஆர்.ராஜன், பசலை நாகராஜ் உட்படபலர் கலந்து கொண்டனர்.கமுதியில் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.முத்துவிஜயன், முனியசாமி, பொன்னுச்சாமி, லூர்து உட்படபலர் கலந்து கொண்டனர்.இராமேஸ்வரத்தில் ஜே.பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.சுடலைக்காசி, கே.தனுஷ்கோடி, ஞானசேகர், டி.இராமச்சந்திரபாபு, மனிகண்டன், ஜி.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் கிளைகள் மற்றும் அரண்மனை முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அய்யாத்துரை, எம். மலைராஜன், விஜயகுமார், மணிக்கண்ணு, பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;