tamilnadu

img

அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்களின் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகம் அருகே தொமுச பொதுச் செயலாளர் பிரபா.தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.நடராஜன் (தொமுச), ஏ.பி.அன்பழகன் (சிஐடியு), எம்.கே.நாராயணசாமி (ஐஎன்டியூசி), இரா.அந்திரிதாஸ் (மதிமுக), எல்.இ.டி.செல்வகுமார் (அம்பேத்கர் தொழிற்சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

**************

கடலூர் மண்டல அலுவலகம் முன்பு தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  வி.தயானந்தன், ஜி.பாஸ்கரன், ஏ.ஜான்விக்டர் (சிஐடியு), தங்க.ஆனந்தன் (தொமுச), இரா.மணிமாறன், கே.பாலகிருஷ்ணன்  (எம்.எல்.எப்), எஸ்.கருணாநிதி, சுந்தர் (ஏஏஎல்எல்எப்), ஆர்.பாலு (ஐஎன்டியூசி) உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

***************

திருவண்ணாமலை போக்குவரத்து தலைமையகம் முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.