tamilnadu

காஷ்மீரை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

ஸ்ரீநகர், ஜுன் 18- காஷ்மீரில் உலகப்புகழ் பெற்ற தால் ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெப்பத்தில் சிக்கியுள்ள நிலையில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகள் தால் ஏரியில் படகில் பயணம் செய்தும், நீர்ச்சறுக்கு செய்தும் பொழுதைப் போக்கி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப காஷ்மீரையும் அழகுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தால் ஏரி பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.