விழுப்புரம், ஜூன் 24- விழுப்புரம் நகரின் நீர் ஆதாரமாக விளங்குவது வி.மருதுார் ஏரி. இந்த ஏரியில் கே.கே. ரோட்டில் இருந்து சாலாமேடு செல்லும் சாாலை ஓரத்தில் கடந்த சில மாதங்க ளாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைகள் இரவில் மருத்து வக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிப்பதால் எழும் புகையும் துர்நாற்ற மும் மக்களுக்கு நோய் பரப்புகின்றன. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அந்தப் பகுதி மக்கள், மருத்துக் கழிவுகளை கொட்டும் தனியார் மருத்து வமனைகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.