tamilnadu

img

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் செய்திகள்

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது பிரதேச மாநாடு ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் வில்லியனூரில் நடைபெறுகிறது. சாதி ஒழிப்பு மாநாடாக நடைபெறுவதையொட்டி புதுச்சேரி உழவர்கரை நகர பகுதியில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது. கவிஞர் தமிழ்ஒளி வாழ்ந்த சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் துவங்கிய பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் துவக்கி வைத்தார். பிரதேசத் தலைவர் ஜெயராமன், செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் தெய்வசிகாமணி, அரிகிருஷ்ணன், நிலவழகன்,கொளஞ்சியப்பன், ராம்ஜி உட்பட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

 

****************

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் ஏவி.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

****************

கர்நாடகாவில் குதிரை பேரம் நடத்திவரும் பாஜகவின் ஜனநாயக படுகொலையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், பிரதேச காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.