கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளதால், அனைத்து காவல்துறையினருக்க்கும் தரமான என் 95 முககவசம் மற்றும் கையுறை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் தொற்று 1531
புதுச்சேரியில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1531ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஜியாஉல்ஹக் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருமணம் தடுத்து நிறுத்தும்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகேயுள்ள வாங்கூர் கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
வாகனங்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை வரை 29,697 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,12,336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமல் படுத்தப்பட்ட தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின் போது விதிமுறைகளை மீறியதாக 810 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 440 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.