tamilnadu

நுண்நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர், மே.24- பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொடுத்த கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட் டத்தில் மகளிர் திட்டம், தொண்டு நிறுவனங்கள் மற்றும்  நுண்நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் ஏராளமான மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன.   இக்குழுக்களுக்கு  தொழில் தொடங்குதல் மற்றும் அத்தியாவசிய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன்கள்  வழங்கப்பட்டு  திரும்ப பெறப்படுகின்றன. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  மக்களின் வாழ்வாதாரம்  பாதிக் கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி  கடன் தவணையை திருப்பி செலுத்த ஆறு மாத காலத்திற்கு  நீட்டிப்பு  வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, இந்த கால கட்டத்தில் எந்த கடனையும் திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுப்பது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறும் செய லாகும். எனவே,  மகளிர் குழுக்கள் தாங்களா கவே  முன் வந்து  வேண்டுமானால் கடனை திரும்ப செலுத்தலாம். அதற்கு மாறாக தொடர்ந்து கடனை திரும்ப செலுத்தக் கோரி நிர்ப்பந்திப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகளில் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கி கள், நுண்நிதி நிறுவனங்கள் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நிறு வனத்தின்  மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக் கப்படும்.

;