tamilnadu

img

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கடசி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 9- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் சுமார் 600 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவ தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 21 வரை 203 பேர் மட்டுமே கொரோ னாவால் பாதிக்கப்பட்டிருநதனர். கடந்த சில தினங்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. எனவே, நோய் தடுப்பு நட வடிக்கைகளை அதிகரிக்க போரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழ னிசாமிக்கு மனு அனுப்பி வைக்கப் பட்டது.  பரிசோதனை மாதிரிகள் எடுக்கும் மையங்களை அதிகப்படுத்த வேண் டும். இராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் பரிசோதனைஙக கருவிகள் அமைத்து உடனுக்குடன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும்.  மாதிரிகள் எடுக்கப்பட்ட நபர்களை முடிவுகள் வெளியாகும் வரை முகாம் களில் அல்லது வீடுகளில் கட்டாயம் தனி மைப்படுத்த வேண்டும்.

நோயாளி களை தங்க வைக்க மேலும் சில மருத்து வமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்வதோடு, தரமான உணவு வழங்க வேண்டும். சாதாராண நோய் களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதற்கு மாவட்ட நிர்வா கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.  மருத்துவர்கள், செவிலியர்கள், சுகா தார பணியாளர்கள் மற்றும் காவ லர்களுக்கு தரமான பாதுகாப்பு உடை கள், கையுறை மற்றும் முகக் கவசங்கள் வழங்கிட வேண்டும். நகர் மற்றும் கிரா மப்புறங்களில் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கொண்ட குழு அமைத்து கபசுரக் குடிநீர், ஹோமி யோபதி மருந்துகள் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விருதுநகர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நகர் செயலாளர் எல்.முருகன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி.வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மீ.சிவராமன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெய பாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் சந்திரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பாராஜ், சுந்தர பாண்டியன், சரோஜா, நகர்குழு உறுப்பி னர்கள் சீனிவாசன், பாண்டி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  

அருப்புக்கோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து, ஒன்றியச் செய லாளர் எம்.கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.  காரியாபட்டியில் வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் சிவபாக் கியம், பரமசிவம், முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சிவகாசியில் நகர் செயலாளர் கே. முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரணியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ. விஜயமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.  திருச்சுழியில் சுரேஷ் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல் வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன். செல்வராஜ், முனியசாமி மார்கண்டன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். வெம்பக்கோட்டையில் ஒன்றிய குழு செயலாளர் (பொ) முனியசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்.ஆர். நகரில் வருவாய் அலுவ லர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாடடத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.சி.பாண்டியன், ஒன்றியச் செய லாளர் பி.நேரு, ஓ.ஆதிமூலம், வீரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

இராஜபாளையததில் நகர் செயலா ளர் பி.மாரியப்பன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் அர்ஜுனன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் தேவா மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அய்யனார்புரத்தில் ஒன்றிய செய லாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்ற சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வத்ராயி ருப்பில் ஒன்றியச் செயலாளர் ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூரில் நகர் செய லாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரு மலை, ஜோதிலட்சுமி, ஒன்றியச் செய லாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;