விழுப்புரம், பிப்.10- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் மாவட்ட அளவிலான கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. கிராம சுகாதார செவிலியர் விஜயா விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளித்தார். ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஜயலட்சுமி ஆகியோர் கொரோனா வைரசின் தாக்கம், நோய் வருமுன் தடுப்பது குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக வரலாற்று துறைத் தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார். பேராசிரியர் லதா நன்றி கூறினார்.