tamilnadu

img

ஊரடங்கு காலத்திலும் ஓய்வின்றி உழைத்த விவசாயிகளுக்கு பாராட்டு

ஈரோடு, மே 16 - கொரோனா ஊரடங்கு காலத்தி லும் ஓய்வின்றி உழைத்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாய பெருமக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கதர் ஆடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், உழவர் சந் தையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.சுப்ரமணியன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன், விவ சாய சங்க நிர்வாகிகள் மணி, சொங் கப்பன், ஆர்.செந்தில்குமார் ஆகி யோர் விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதேபோல், சத்தியமங்கலம் தினசரி சந்தையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், விவசாய சங்க தாலுகா தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். இதில் விவ சாய சங்க ஈரோடு மாவட்ட பொரு ளாளர் கே.எம்.விஜயகுமார், தாலுகா செயலாளர் பி.வாசு தேவன், மாவட்ட குழு உறுப்பி னர் செல்லிகவுண்டர், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செய லாளர் ஆர்.சத்தியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், ஏ. சகாதேவன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் மணி (எ)பழனிசாமி, பாப்பனன், மணி, பிரசாந்த், தேவ ராஜ், விஜயன் உட்பட பலர் பங் கேற்று விவசாயிகளுக்கு கதர் ஆடை அணிவித்து பாராட்டு தெரி வித்தனர்.

கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ.எம். முனுசாமி தலைமை யில் விவசாயிகளுக்கு பொன் னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் வசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ. அய்யாவு,   மின்ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி எம். ஆர். பெரியசாமி, முருகே சன், மாருசாமி,  செல்வ ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம்,  ஓமலூர் பகுதியில் கரும்பு விவசா யிகள் சங்க மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற  பாராட்டு நிகழ்ச்சியில் ஓமலூர் ஒன்றிய சேர்மேன் ராஜேந்திரன் சிபிஎம் மாவட்டகுழு உறுப்பிளர் பாலகிருஷ்ணன், எம். செட்டிப்பட்டி ஊராட்சி தலை வர் கோவிந்தன், ஆகியோர் விவ சாயிகளுக்கு கதர் ஆடை அணி வித்தனர். சங்ககிரி பகுதியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் எ.ராம மூர்த்தி தலைமையில் விவசாயி களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.இதில் தாலுகா செய லாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சங்க நிர்வாகி ராமசாமி உள்ளிட் ட்டோர் பங்கேற்றனர். வாழப்பாடி பகுதியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் தங்கவேல், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அன்பழ கன், நங்கவள்ளி பகுதியில் விவ சாய சங்க செயலாளர் பாலாஜி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி மற்றும் மேச்சேரி பகு தியில் துணைத்தலைவர்கள் பி. தங்கவேலு, மணிமுத்து, ஒன்றிய பொருளாளர் ரத்தினவேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;