tamilnadu

img

8 ஆண்டுகளில் 8,418 பேருக்கு கறவை மாடுகள்

விழுப்புரம், ஜூன் 11- விழுப்புரம் மாவட்டத் தில் தமிழக அரசின் இல வச கறவை மாடுகள் வழங்  கும் திட்டம் குறித்து  மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் வை. ரவிசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழக அரசால் கடந்த  15.09.2011 அன்று தொடங் கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும்  திட்டத்தின் கீழ் விழுப்புரம்  மாவட்டம், முகையூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட, அருமலை முதல் கிராமமாக தேர்வு செய்யப்  பட்டு 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.   இத்திட்டத்தின் கீழ்  பயன் பெற பயனாளிகள் மகளிராக இருக்க வேண்டும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, ஆதி திராவிடர், பழங்குடியின ருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு  வழங்கப்படுகிறது, தேர்வு  செய்யப்பட்ட பயனாளி களுக்கு கறவைப் பசு கொள்  முதல் மற்றும் வளர்ப்பு  குறித்து பயிற்சி வழங்கப் பட்டு நேரடியாக சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டு கறவைப்பசுக்கள் கொள் முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு பய னாளிக்கு கறவைப்பசுக்காக ரூ.35ஆயிரமும், காப்பீடு தொகையாக ஆயிரத்து ஐம்பது, போக்குவரத்து  செலவாக ரூ. 2ஆயிரத்து 500,  பயிற்சி கட்டணமாக-ரூ.300 என ரூ.38ஆயிரத்து 850 வழங்குகிறது. மாதந் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இனப்  பெருக்க மருத்துவ பரி சோதனை மற்றும் குடற்புழு  நீக்க முகாம் நடத்தப்படு கிறது.  மாடுகள் பெற்ற   பய னாளிகள் அனைவரும் அந்த  கிராமத்தில் ஆவின் நிறு வனம் மூலம் தொடங்கப் பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி பால் வழங்க வேண்டும்.  இம் மாவட்டத்தில் 2011 முதல் 2019 வரைக்கும் 8  ஆண்டுகளில் 168 கிராமங்க ளில் 8ஆயிரத்து,418 பயனாளி களுக்கு  ரூ. 31 கோடியே 11  லட்சம் மதிப்பில் இலவச கறவை மாடுகள் வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஆயிரத்து 985 கன்றுகள் பிறந்துள்ளது. தினசரி 31 ஆயிரத்து 908 லிட்டர் பால் உற்பத்தி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வேலியந்தல் கிரா மத்தைச் சேர்ந்த மல்லிகா, பாக்கியலட்சுமி இலவச கறவை மாடுகள் பெற்றதன் மூலம் மாதந்தோறும் தங்கள்  குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம்  நிரந்தர வருமானம் பெற்றுள்  ளனர். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.