tamilnadu

img

மருத்துவர்கள் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் ஆதரவு

தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேச கோரிக்கை

சென்னை,அக்.29-   நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நடத்தி வரும்  வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த மூன்று வருடமாக முதுநிலை  பட்டப்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வழங்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. எனவே பொது சுகாதாரம் சிறந்து விளங்கிட 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்திட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

கூடுதலான மருத்துவர்களை அரசாங்கம் நியமிக்காமல் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடி யாத சூழல் உள்ளது. எனவே கூடுதலான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு 13 வருடங்களில் கிடைக்கக் கூடிய சம்பளம், மாநில அரசின் கீழ் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 20 வருடங்கள் கழித்து தான் கிடைக்கிறது. இது அடிப்படை யிலேயே முரணாக உள்ளது. எனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளத்தை மாநில அரசு மருத்து வர்களுக்கும் கொடுத்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது நியாய மான போராட்டத்திற்கு ஆதரவாக இயக்கம் நடத்திட வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழுக்களை  கேட்டுக் கொள்கிறோம். போராடும் மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் நியாய மான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டு மென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;