tamilnadu

img

தமிழகம் புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை,செப்.8-  அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,  வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;