தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிக ளில் வரிமட்டி சீசன் துவங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நத்தை இனத்தை சேர்ந்த மட்டி இனமாகிய இவற்றை வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டி என பல வகை உண்டு. மட்டியின் சதைப்பகுதி யை வறுத்தும், அவியல் செய்தும் உண்பார்கள். வரிமட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாகக் இருக்கும். ஒரு மரக்கால் அளவில் ரூ.150 விற்கின்றனர். இவ்வியாபாரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராமப் பகுதிகளில் வசிக்கும் மீனவப் பெண்கள் தினந்தோறும் காலை நேரங்க ளில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். மட்டி விற்பனை செய்து வரும் ஆண்டாள் கூறுகையில், ‘வரிமட்டி ஏரிப்புறக்கரை கடலோரப் பகுதியில் அதிகளவில் பிடிபடுகின்றன. பலவித மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக, மூலச்சூட்டிற்கு ஏற்றது. வலை போட்டு இதை பிடிக்க முடியாது. சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கி தான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகு சாதனப் பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படு கிறது. வரிமட்டியின் ஓடு கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இம்மட்டி மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பிடிபடும்’ என்றார்.