tamilnadu

img

ஆசிரியர் பட்டய தேர்வு வினாத்தாள் விவகாரம்: மாணவர்கள் போராட்டம்

சென்னை, நவ. 12- 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டய பயிற்சித் தேர்வில் அனைத்து மாணவர்களையும் தோல்வியடையச் செய்ததைக் கண்டித்தும், வினாத்தாள்களை மறு கூட்டலுக்கு உட்படுத்தக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாணவி வித்யா தலைமையில் செவ்வாயன்று (நவ. 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் தேர்வு எழுதிய  மாணவர்களும் கலந்து கொண்ட னர். மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஆகாஷ், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி, மாவட்டத் தலைவர் சுந்தர்  நிர்வாகிகள் குமரன், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் 4 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி யுள்ளனர். இதில் 100 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். பிற மாணவர்களை கல்வித் துறை திட்டமிட்டே தோல்வியுறச் செய்துள்ளது. இது மத்திய அரசு  கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் வெளிப் பாடாகவே உள்ளது. 

சாதாரண ஏழை எளிய தலித் பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் ஆசிரியர்களாக வரக்  கூடாது என்ற நோக்கத்தி லேயே தேர்வில் தோல்வியுறச்  செய்துள்ளனர். தோல்வி யடைந்த மாணவர்கள் தமிழகம்  முழுவதும் போராடி வருகின்ற னர். அதன் ஒருபகுதியாக அர சின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் சென்னையில் இந்த போராட்  டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்தும் மாணவர்களின் கோரிக்கைகள் பற்றியும் அரசிற்கும், கல்வித்  துறைக்கும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு அளித்துள்ள னர். அதில், ஏழை எளிய குடும்பங் களைச் சார்ந்த மாணவர்கள் மீண்டும் பணம் கட்டி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, அனைத்து  மாணவர்களின் வினாத்தாள் களையும் அரசே மறு கூட்டலுக்கு  உத்தரவிட வேண்டும். தேர்ச்சி முறையில் உள்ள குளறுபடிகளை அரசு உடனடியாக சரி செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி பியூலா கூறுகையில்,“2019ஆம் ஆண்டுக்கான தேர்வை ஜூன் மாதம் எழுதியிருந்தோம். அதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம்தான் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாதமே தேர்வு  முடிவுகளை அறிவித்து விட்டார்  கள். தேர்வு எழுதிய பெரும்பா லான மாணவர்கள் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் அளித்து தோல்வி யுறச் செய்துள்ளனர். எங்களுக்கு  7 பாடப் பிரிவுகள். 7 பாடப் பிரி விலும் எங்களை தோல்வியுறச் செய்துள்ளார்கள். இதில்தான் எங்கள் வாழ்க்கை அடங்கியுள் ளது. எனவே அரசு இந்த பிரச்ச னையில் தலையிட்டு மாணவர்க ளின் நலன் கருதி எங்களுடைய வினாத்தாள்களை மறு கூட்டல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார்.

;