tamilnadu

img

மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை!

வருவாய் நிர்வாக ஆணையர் வாக்குறுதி

சென்னை,பிப்.3- மனநோய் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று வருவாய் நிர்வாக  ஆணையர் ராதாகிருஷ்ணன் வாக்கு றுதியளித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை  மாநில அளவில் நடத்தப்படும் மாற்றுத்  திறனாளிகள் குறை தீர்கூட்டம் வரு வாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் திங்களன்று  (பிப்.2) சென்னை எழிலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், மாநில சமூகப்  பாதுகாப்புத் திட்ட இயக்குநர் சூ. வெங்கடாச்சலம், சென்னை மாவட்ட  ஆட்சியர் சு.சீதாலட்சுமி, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை இணை இயக்கு நர் சூ.முருகேசன்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 40 சதவீத ஊனமும், ஆண்டு வரு மானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக  உள்ள அனைத்து வகை மாற்றுத்திற னாளிகளுக்கும் மாதாந்திர சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை ரூ.1000  வழங்கப்படும் என மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததின் அடிப்படையிலும், 2018  ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படியும்  இதுவரை உதவித்தொகை வழங்கப்படுவ தில்லை என இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக பல முறை வலியுறுத்தி யும்,  மன நோய் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு தமிழக அரசு உதவித்  தொகை வழங்க மறுத்து வருகிறது. ஊனமுற்றோர் அடையாளச் சான்று  வழங்கப்பட்ட மனநோய் மாற்றுத்திற னாளிகளுக்கு புதுச்சேரி, கேரளா,  தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களில் உதவித்தொகை வழங் கப்படுவதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப் பட்டது. மேலும், அரசாணைக்கு மாறாக,  வயது, சதவீதம் ஆகியவற்றை கார ணம் காட்டி உதவித்தொகை பல இடங் களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வருவாய் நிர்வாக ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசுக்கு இந்த கோரிக்கையை எடுத்துச் சென்று,  தமிழகத்தில் மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை கிடைக்க  நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் கடந்த  ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்த தின் அடிப்படையிலும், 2017 ஆம்  ஆண்டு வருவாய் நிர்வாக ஆணையர்  பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படை யிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  கோட்டாட்சியர்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கான குறைதீர்கூட்டங்கள் நடத்துவதற்கு அழுத்தம் தரப்படும், இதற்காக மண்டல அளவில் தான்  பங்கேற்கும் கோட்டாட்சியர் கூட்டங் கள் நடத்தப்படும் என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை இணையவழி விண்ணப்ப பதிவு முறை  இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மாநி லத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் வரவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் பொதுச் செய லாளர் எஸ். நம்புராஜன், மாநில துணைத் தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென் மண்டல இயக்குனர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன், டிசம்பர்-3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.அண்ணாமலை, துணை பொதுச்செயலாளர்  பி.சரவணன், பொருளாளர் வரதன் பூபதி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

;