tamilnadu

img

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை:

கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வெப்ப சலனம் மற்றும் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்ப சலனத்தின் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
 

;