tamilnadu

img

ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி

டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் நிதி அமைச்சர், கேரள அரசு வாழ்த்துச் செய்தி

மதச்சார்பற்ற விழாவான கேரள த்தின் ஓணம் பண்டிகையன்று சிறப்பு இதழ்களை தீக்கதிர் நாளிதழ் வெளியிடுவது மகிழ்ச்சிகரமானது. ஓணம் பண்டிகை சமத்துவம், சகோதரத்துவத்தின் மகிமையை பகிர்ந்து கொள்கிறது. முந்தைய காலங்களில் நிலவிய உண்மை மற்றும் நம்பிக்கை, கொள்கைகள் மற்றும் வளங்கள் ஆட்சி செய்த நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகிறது. உலகில் நியாயத்தையும் வளத்தையும் கட்டமைப்பதற்கு மக்கள் அனைவரும் தங்கள் கரங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை இப்பண்டிகை நமக்கு நினைவு படுத்துகிறது. தற்போது மனிதர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், அவற்றை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இவ்விழா வலியுறுத்துகிறது. ஓணம் என்பது கொண்டாடப்படும் பண்டிகை மட்டுமல்ல, மேலும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை செயல்படுத்துவதற்கான விழாவும் ஆகும். தீக்கதிர் வாசர்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்


டி.பி.ராமகிருஷ்ணன் வேலை வாய்ப்பு - தொழில் திறன் மற்றும் கலால் துறை அமைச்சர், கேரளஅரசு

ஒற்றுமை, சமத்துவம் செய்தியுடன் ஓணம் பண்டிகை வந்துள்ளது. அனைவருக்கும் இதயம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விவசாயச் செழிப்பின், செல்வச் செழிப்பின் சின்னம்தான் ஓணம். இது, மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்த காலத்தை நினைவூட்டுகிறது.  கோவிட்-19 தொற்று நோய் உருவாக்கிய நெருக்கடிகளுக்கிடையே இதிலிருந்து மீட்சிப் பெறுவதற்கான முழக்கத்துடன் இந்த முறை ஓணம் கொண்டாடப்படுகிறது. நல்ல நாள் குறித்த நம்பிக்கைகளுடன் மீட்சிப் பெறும் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம். அனைவரும் நன்மையும், நலமும் பெற ஓணம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

;