tamilnadu

img

அக். 20 முதல் வடகிழக்கு பருவமழை

வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, அக். 9- வடகிழக்கு பருவமழை வருகிற 20 ஆம் தேதி தொடங்கும் என வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை ஜூன் 8 ஆம்  தேதி தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. கேரளா,  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்  கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென் காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் தீவிர மடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பி காவிரி யில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை 120அடியை எட்டியது.

தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 689 மி.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி-931 மி.மீ.,  தருமபுரி-763, வேலூர்-748, சேலம்-732,  புதுச்சேரி-588, சென்னை நகரம்-493,  திருப்பத்தூர்-541, கட லூர்-512 மி.மீ.  மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையை விட அதிகமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறிய தாவது:- தென்மேற்கு பருவ மழை வட இந்தியாவில் விலகுவதற்கான அறி குறி தொடங்கி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம். அநேகமாக வருகிற 20 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கி றோம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ  மழை நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கி யது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக் டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் அறி குறி காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.