tamilnadu

img

வேலை நேரத்தை 12 மணி நேரம் என சட்டமாக்கச் சொல்வதா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

திருப்பூர், மே 5 – கொரோனா பெருந்தொற்றுத் தாக்கு தலைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்று ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தொழிலாளர்களின் சட்ட உரிமையைப் பறிக்கும் இந்த மோசமான கோரிக்கையை ஏற்காமல், உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திங்களன்று எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களாக நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரியான முன்திட்டமிடல் செய்யாமல் அமலாக்கப்பட்ட இந்த ஊரடங்கு காரண மாக மிகப்பெரும்பான்மையான மக்கள், குறிப்பாக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வேலை இழப்பு, வருமானம் இழப்புடன், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் பட்டினிக் கொடுமையை அனுபவிக்கும் நிலைமையும், சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற தவிப்போடும் உள்ளனர். இன்றும் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திருப்பூரில் போராட்டத் தில் ஈடுபட்டது ஊடகங்களின் வாயிலாக தங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் என நம்புகிறோம். தமிழக அரசின்  நிவாரண நடவடிக்கை ஓரளவு பலனளித்தாலும், பலர் அந்த குறைந்தபட்ச நிவாரணமும் கிடைக்காமல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு  மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப் பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஜவுளித் தொழில் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இயங்குவதற்கு சில வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) அமைப் பின் தலைவர் ஏ.சக்திவேல் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களை மேற்கோள்காட்டி தொழி லாளர்களின் சட்டப்படியான 8 மணி நேர வேலை நேரத்தை  நாளொன்றுக்கு 12 மணி நேரமாக அதிகரிக்க தமிழகத்திலும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது ஏற்கெனவே இருக்கக்கூடிய மிகை நேர (ஓவர்டைம்) வேலை சட்ட உரிமையை கை விட்டு வாரம் 72 மணி நேரம் வேலை செய்ய வும், மிகை நேரத்துக்கான இரட்டிப்புச் சம்பளத்தையும் தராமல் 12 மணி நேர வேலைக்கு வழக்கமான சம்பளம் மட்டுமே வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். 

இது ஏற்கெனவே வேலையின்மை, வருமானம் இன்மை என நெருக்கடியைச் சந்தித்து வரும் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தையும், சட்ட உரிமைகளையும், இப்போதைய கொரோனா நெருக்கடி சூழலைக் காரணம் காட்டி, பறிக்கக் கூடிய பிற்போக்குத்தனமான கோரிக்கை என்பதில் எந்த சந்தேகமும் தேவை யில்லை. தொழிலாளர்களை சட்ட உரிமைகள்  அற்றவர்களாக, அவர்களை நிர்க்கதியான வர்களாக மாற்றி கடுமையான சுரண்டலுக்கு  உள்ளாக்க நினைக்கும் ஏஇபிசி அமைப்பின் கோரிக்கையை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தற்போதைய இக்கட்டான நிலையில் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், தொழிற் சாலைகள் செயல்படத் தொடங்கும்நிலை யில், அவர்களின் வீட்டு வாடகை, விரைவில் தொடங்கவுள்ள குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியா வசியச் செலவுகள் ஆகியவற்றை ஈடுகட்ட  ஏதுவாக ஏற்கெனவே சட்டப்படி உத்தர வாதம் செய்யப்பட்ட ஊதியத்தை தொழி லாளர்கள் பெறுவதை உத்தரவாதம் செய்ய  வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.