tamilnadu

img

ஆன்லைன், செயலி மூலம் பணம் செலுத்த மின்சார வாரியம் வேண்டுகோள்

சென்னை,மார்ச் 18- கொரோனா அச்சுறுத்தலால்  பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க, மின் நுகர்வோர் முடிந்த வரையில் ஆன்லைன் (www.tangedco.gov.in) மூலமாக அல்லது மின்சார வாரிய ஆப் ( tneb app in play store) மூலமாக பணம் செலுத்தும்படி கேட்டுகொள்ளப்படுகிறது. இதன் மூலம் பணம் செலுத்தும் மையத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.

பொது மக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தொலைபேசி மூலமாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ (Toll free no.1912) உதவி  பொறியாளர்கள் / உதவி செயற்பொறியாளர்களின் தொலைபேசி எண்களை இணையதளம் மூலமாக அறிந்து குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறது. அனைத்து மின்வாரிய பணம் செலுத்தும்  இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்திட வும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை யும் தவறாமல் மேற்கொள்ள அலுவலர் மற்றும் பணி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

;