tamilnadu

img

50 ரயில் சேவைகள் ரத்து

சென்னை,மார்ச் 18- முன்பதிவு மிகவும் குறைந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்க ளுக்கு இயக்கப்படவிருந்த 14 ரயில்களின் 50 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பயணங்களைத் தவிர்க்குமாறும், நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்பதிவு மிகவும் குறைந்ததால் சென்னை சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் - மதுரை இடையிலான துரந்தோ ரயிலின் 6 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான குளிர் வசதி கொண்ட ரயிலின் 8 சேவைகளும்  மங்களூர் - மட்கான் இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில் மார்ச் 19 முதல் 31 வரை என மொத்தம் 26 சேவைகளும் சென்னை சென்ட்ரல் -செகந்திராபாத் இடையிலான விரைவு ரயிலின் 4 சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.