tamilnadu

img

இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தின் அளவு குறைப்பு

இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக பண புழக்கத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படும் ரெப்போ விகிதத்தின் 25 புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.


நாட்டில் உள்ள பண புழக்கத்தின் அளவை நிர்ணயிக்கும் அளவீடாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Repo and reverse repo Rate) என்ற அளவீடுகளை பயன்படுத்தி வருகிறது. ரெப்போ விகிதம் குறையும்போது நாட்டில் பண புழக்கத்தின் அளவு அதிகரிக்கும்.


ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான 6 பேர் கொண்ட கொள்கை மேற்பார்வை குழு பண புழக்கத்தின் அளவை சமன் செய்ய ரெப்போ விகிதத்தின் அடிப்படை புள்ளிகளை 25 குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 6.25லிருந்து 6 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனிற்கு வழங்கும் வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவிகிதத்தில் உள்ளது.

;