tamilnadu

img

ஐந்தில் ஒருவருக்கு கொரோனா... லண்டனில் தொடரும் சோகம்.... 

லண்டன் 
பிரிட்டனில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பிக்க ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பு மையமாகப் பிரிட்டன் உள்ளது.  

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இங்கிலாந்து தலைநகர் லண்டன் தான். இங்கு ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்," லண்டனில் உள்ள 17 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அந்த நகரின் மொத்த மக்கள் தொகையான 93 லட்சத்தில், 15.3 லட்சம் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் 5 சதவீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுதல் செய்தியாக இறப்பு வீதம் மிகவும் குறைவு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாகத் தேசிய புள்ளிவிவரங்களுக்கான தனி தரவுகளின் அடிப்படையில், இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகையில் 0.25 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் வாரத்திற்கு 61,000 பேரும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,700 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  

கொரோனா பாதிப்புக்கான தரவரிசையில் பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

;