பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி, ஒலாவின் இயக்க உரிமத்தை ரத்து செய்துள்ளது லண்டன் பொதுப்போக்குவரத்து ஆணையம்.
பெங்களூருவை சேர்ந்த பொதுப்போக்குவரத்து நிறுவனமான ஓலா நிறுவனம், இந்தியா, ஆஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வருகிறது.
மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது கிளையை லண்டனில் இந்நிறுவனம் தொடங்கியது.
தொடங்கியதிலிருந்தே உபெர் மற்றும் பாரம்பரிய கருப்பு வண்டி ஓட்டுநர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக ஓலா உள்ளதாக இந்நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் பொது போக்குவரத்தில் அதிக எண்ணிக்கையிலான தோல்விகள் உள்ளது. இந்நிறுவனத்தின் செயலி சட்டதிட்டங்களுக்கு பொருந்தாத நிலையில் உள்ளது. மேலும் இது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது என லண்டனின் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.