tamilnadu

img

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா

லாகூர்:
பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அஷாத் கைஷர் வியாழக்கிழமை தாமதமாக முன்வந்து கொரோனா சோதனை செய்துகொண்டுள்ளார்.

அவருக்கு தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. ரம்ஜானையொட்டி சபாநாயகர் அஷாத் கைஷர் இப்தார் விருந்தளித்துள்ளார். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர் பங்கேற்றுள்ளனர். பின்னர், பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளை அஷாக் கைசர் திங்களன்று சந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்து தம்மை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார். பாகிஸ்தானின் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தின் தலைவரை சந்தித்த பின்னர் சபாநாயகருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதே போல் அவரது மகன், மகளுக்கும் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைசர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "" கொரோனா வைரஸ் சோதனை செய்த நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நாட்டு மக்கள் முழுக்கவனத்துடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகள் தங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொள்வார்களா? தனிமைப்படுத்திக் கொள்வார்களா?  என்பது தெரியவில்லை.

;