tamilnadu

img

கொரோனா பலி எண்ணிக்கை... இத்தாலியை பின்னுக்குத்தள்ளிய பிரிட்டன்....  

லண்டன் 
கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே கடும் சேதாரத்தை சந்தித்த இத்தாலி நாடு தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு இதுவரை 2.13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்து 315 பேர் பலியாகியுள்ள நிலையில், 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் ஐரோப்பாவின் புதிய கொரோனா மையங்களாக உள்ள ரஷ்யா மற்றும் பிரிட்டன் நாடுகள் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 55 ஆயிரத்தை தாண்டினாலும், அங்கு பலி எண்ணிக்கை (1,451) குறைவு தான். ஆனால் 4 நாடுகளை உள்ளடக்கிய பிரிட்டன் கொரோனாவால் உருகுலைந்துள்ளது. அங்கு இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக பலி எண்ணிக்கையில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி ஐரோப்பாவில் அதிக கொரோனா பலி எண்ணிக்கையை சந்தித்த நாடு என்ற சோகத்தை சந்தித்துள்ளது.  

;