tamilnadu

img

ஒரே நாளில் 1200 பேர் பலி... கொரோனாவால் திணறும் பிரேசில்...

ரியோ 
தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசில் அக்கண்டத்தின் கொரோனா மையமாக உள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலகளவிலான கொரோனா பட்டியலில் குறுகிய காலத்தில் 2-வது இடத்துக்கு முன்னேறி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்நாட்டின் மூலமாக அருகில் உள்ள சிலி, பெரு, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37,997 பேர் புதிய நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 14.08 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் அதிர்ச்சி சம்பவமாக இன்று ஒரே நாளில் 1,271 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. எனினும் ஆறுதல் செய்தியாக  7 லட்சத்து 90 ஆயிரத்து 40 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

சாவோ பவுலோ, ரியோ, சியரா, பாரா ஆகிய மாகாணங்களில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. இந்த மாணங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவிட்டாலே பிரேசில் கொரோனா இல்லாத நாடாக முளைக்க 70 சதவீத வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

;