tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக்கோரி ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                             ******************

தீபாவளி பண்டிகையையொட்டி,சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 நாட்களுக்கு சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

                             ******************

தமிழகம் முழுவதும் இன்று வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித் துள்ளார்.

                             ******************

பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.