tamilnadu

ரஷ்ய ஜனாதிபதியுடன் கிம் சந்திப்பு

மாஸ்கோ, ஏப். 25-ரஷ்ய ஜனாதிபதி புடினுடன், வடகொரிய ஜனாதிபதிகிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்ய நாட்டின் விளாடி வோஸ்டாக் நகரின் ரஸ்கி தீவில் உள்ள ஈஸ்ட் ஃபெடரல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்தும்,அணு ஆயுதங்கள் குறித்தும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், கிம் ஜோங் உன் விவாதித்ததாக தகவல் வெளியாகி யுள்ளது.இதனைத் தொடர்ந்து, இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புடினுடனான முதல் சந்திப்பு, மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாக கிம் ஜோங் உன் தெரிவித்தார்.கொரிய தீபகற்பத்தில் நில வும் பிரச்சனைகளை முற்றாக முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யா உதவும் என விளாடிமிர் புடின் உறுதிஅளித்தார். அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப்புடன் 2 மாதங்களுக்கு முன்பு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விளாடிமிர் புடினுடனான, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 

;