tamilnadu

img

ரூ.20 லட்சம் கோடி பணத்தை எங்கிருந்து திரட்டப் போகிறீர்கள்..?

மும்பை:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13 மற்றும்14 தேதிகளில் சிறு, குறு தொழில்முனைவோர், என்பிஎப்சி, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடங்கி, விவசாயிகள், வியாபாரிகள், சம்பளதாரர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்பஅட்டைதாரர்கள் என பலருக்கும் பல திட்டங்களை அறிவித்தார்.ஆனால், 4-ஆம் கட்ட ஊரடங்கு மற்றும் சிறப்பு தொகுப்புஅறிவிக்கப்பட்ட போதிலும்அதன் தாக்கம் பங்குச்சந்தையில் பிரதிபலிக்கவில்லை. இதனால் சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் வர்த்தகம் இறக்கத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின்அறிவிப்புகளில் இருக்கும் குழப்பங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஒரேயடியாக 20 லட்சம்கோடி ரூபாய்க்கு திட்டங்களைச் சொல்வார்கள் என்று சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நிதியமைச்சரோ டிவி சீரியல் போல பகுதி, பகுதியாக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.அடுத்தது, என்பிஎப்சி-க்களுக்கு உதவிகள் போதாது என்பதையும் ஒரு காரணம் என்று கூறும் சந்தை வல்லுநர்கள். முக்கியமாக இந்த திட்டங்களுக்கான ரூ. 20 லட்சம் கோடிபணம் எங்கிருந்து வரும் என் பதை இதுவரை நிதி அமைச்சர் விளக்கவில்லையே.. ஏன்? என் பதை முக்கிய கேள்வியாக எழுப்பியுள்ளனர்.

;