tamilnadu

img

மாணவராக இருந்திராத மோடிக்கு மாணவர் போராட்டம் புரியாது... பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா பேட்டி

மும்பை:
மாணவராக இருந்திராத பிரதமர் மோடி, போராடும் மாணவர்களை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை என்று புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா கூறியுள்ளார்.‘தி வயர்’ இணையதள ஊடகத் திற்கு, நசிருதீன் ஷா அண்மையில் நேர் காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“நான் 70 ஆண்டுகாலம் இங்கு வாழ்ந்தும், என்னால் முடிந்த பணிகளைச் செய்தும், நான் இந்தியாவில் வசித்ததை என்னால் நிரூபிக்க இயலவில்லை என்றால், நான் என்ன செய்வதுஎன எனக்குத் தெரியவில்லை. இதனால்நான் பயமோ கவலையோ அடையவில்லை. மாறாக, கோபமே அடைந்துள்ளேன்.தற்போது வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகைப் பதிவேடு போன்ற வற்றுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிராக மக்கள்மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களின் எழுச்சி ஆச்சரியமாக உள்ளது. திரைப்படத்துறையில் உள்ளஇளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், பெரிய நடிகர்கள் இவற்றை எதிர்த்தால், தங்களுக்கு பெரிய இழப்பு எதுவும் ஏற்படலாம் என்று அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இது எனக்கு ஆச்சரியமில்லை.

பிரதமர் மோடி, மாணவர்களையும் அறிவுஜீவிகளையும் அவமதித்து வருகிறார். அவர் ஒருபோதும் மாணவராக இருந்தது கிடையாது. எனவே, அவருக்கு மாணவர்கள் மீது இரக்கமோ, பச்சாதாபமோ கிடையாது. ஒரு மாணவராக இருந்திராத பிரதமர் மோடி,மாணவர்களை எதிர்ப்பதில் ஆச்சரியம்கிடையாது. ஆனால், இந்த வெறுப்பு, எங்கிருந்து வந்தது, என்பதை நினைக் கையில்தான் எனக்கு திகைப்பாக உள்ளது.இவ்வாறு நசிருதீன் ஷா நேர்காணலில் கூறியுள்ளார்.

;