tamilnadu

img

காதலிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வைப்பு... மகாராஷ்டிர பள்ளியின் வேண்டாத வேலை

மும்பை:
உலகம் முழுவதும், ‘பிப்ரவரி 14’ காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்களும்,பெண்களும் தமக்கு பிடித்தமானவர்களிடம் அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொள்கிறார்கள். பரிசளித்தும் மகிழ்கிறார்கள். இந்நிலையில், 2020’ காதலர் தினத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி சிந்தூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியானது, தங்கள் பள்ளி மாணவியரை, “நாங்கள் யாரும் காதலிக்க மாட்டோம்; ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்” என ஒரு அபத்தமான உறுதிமொழியை ஏற்க வைத்துள்ளது. 

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 0.45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மாணவிகள் சிறுமிகள் வரிசையாக நின்று ஒருவருக்குப் பின் ஒருவராக உறுதிமொழியை வாசித்து பள்ளி அதிகாரியிடம் சத்தியம் செய்கின்றனர்.வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளவினோத் ஜகதலே (@vinodjagdale80) என்ற நபர், மகராஷ்டிர பாஜக தலைவர் பங்கஜா முண்டே, துணைத் தலைவர் சித்ரா வாக், கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் ரத்னகிரி -சங்கேஷ்வர் தொகுதியின் எம்எல்ஏ உதய் சமந்த் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

;