tamilnadu

img

இந்தியா, சீனா ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கோவிட் தடுப்பூசி தயாரிக்கத் தொடங்கலாம் - புடின்

இந்தியா, சீனா ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கோவிட் தடுப்பூசி தயாரிக்கத் தொடங்கலாம் என ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில நாடுகளில் கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாடுகளில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் பல கோடி கணக்கில் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனாவிற்கு எதிராக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவும் சீனாவும் தயாரிக்கத் தொடங்கலாம் என்று ஜனாதிபதி விளாடிமிர் பிடின் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதும், அதனை விரிவுபடுத்தவும் வேண்டும் என புடின் கூறியுள்ளார்.

=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-==--=-=-=