tamilnadu

img

மயிலாடுதுறையில் 21 இடங்களில் வாலிபர் சங்க கொடியேற்றம்

மயிலாடுதுறை, நவ.4 - இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் அமைப்பு தினத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டத் தில் 21 மையங்களில் சங்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, தரங்கம்பாடி ஒன்றியம் அரும்பாக்கம், சீர்காழி ஒன்றியம் மருவத்தூர், செம்பனார்கோவில் ஒன்றியம் அப்பராசப்புத்தூர், குத்தாலம் ஒன்றியம் பருத்திக் குடி, கொள்ளிடம் ஒன்றியம் புளியந் துறை, ஏகோஜிமகாராஜபுரம் வெண்மணி நகர் உள்ளிட்ட 21 மையங்களில் சங்கத்தின் கொடியை ஏற்றி, பாசிசத்திற்கு எதிரான  உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கடலங்குடி கிராமத்தில் ஒன்றியத் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் குமரேசன், பொரு ளாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.