tamilnadu

ஏன்?

அடிக்கடி களப்புக்கடை போகிறாயே ஏன்?
உனக்கு அம்மா இல்லையா..
உன் மனைவி சுவைக்கூடி 
சமைப்பதில்லையா..
விடுதியில் தங்கி வேலை செய்கிறாயா..
களப்புக்கடை சுவை பிடித்து விட்டதா..
என்னதான் பிரச்சனை உனக்கு..
ஏன் அடிக்கடி களப்புக்கடை பக்கம்..?
அன்பாய் விசாரிக்கும் நண்பனிடம்
நான் எப்படிச் சொல்வேன்..?
இதே களப்புக்கடையில்
ஸ்டூலில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக
என் அப்பாவின் அப்பாவை
ஊரையே கூட்டிக் கட்டி வைத்து அடித்ததை...
- இளங்கவி இராஜேஷ்

;