லக்னோ:
கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் உ.பி.யைச் சேர்ந்த கூட்டணி கட்சியான அப்னா தள் தலைவர் அனுபிரியா படேலுக்கு பாஜக அமைச்சர் பதவிவழங்கியது.
ஆனால், மற்றொரு கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியைக் கண்டுகொள்ளவில்லை. இது நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.“அப்னா தள் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்கும் போது எங்களுக்கு ஏன் தரக்கூடாது? அனுபிரியா படேலுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது என் மகனும் எம்.பி.யுமான பிரவீனுக்கு ஏன் அமைச்சர் பதவி தரக்கூடாது? அப்னா தள் கட்சிக்கு செல்வாக்கு என்பதே சில தொகுதிகளில்தான் இருக்கிறது. ஆனால் எங்களது நிஷாத் கட்சிக்கு 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது” என்று அவர் கொந்தளித்துள்ளார்.“எங்களுடைய அதிருப்தியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம். இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை வெற்றிபெற்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியில், 2018 இடைத் தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளராக சஞ்சய் நிஷாத் மகன் பிரவீன் நிஷாத் போட்டியிட்டார். அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவளித்தது. அத்தேர்தலில் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 2019 மக்களவைத் தேர்தலிலும் சந்த் கபீர் நகர் தொகுதியில் போட்டியிட்டு பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.